Wednesday, 6 August 2014

உன்னையே தேடு.



புதிய கீதை.(1)

உன்னையே நீ உனக்குள்ளே தேடு
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதை
கண்ணைத் திறந்தது காண்டீபனை
மண்ணைப் புதுப்பித்தது மறுவரவை.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைத்தது
வேதம் அதுதான் என்பதைக் கதைத்தது.

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
அதர்மம் மனிதனில் செருக்கும் பொழுதெலாம்
கர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் என நபி நேசன்
ஆகமம் தந்தும் அகிலம் காத்தனர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலை கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் செயலோ~!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யுமோ!


கொ.பெ.பி.அய்யா.

தொடரும்.      


No comments:

Post a Comment