Monday, 17 February 2014

ஈழத்துப் பரணி.

ஈழத்துப்பரணி!

ஈழம் கொண்டோம் ஈழம் கொண்டோம்
என்றே பாடுவோம்!
வாழ ஆளக் கண்டோமென
வாகை சூடுவோம்!

சத்தியங்கள் மீறியென்றும்
எத்தவறும் செய்யமாட்டோம்!
கத்தி எம்மை நோக்கும் போதும்
பத்தியமும் காக்க மாட்டோம்!

புத்தனாக வேடம் போடும்
பொய்யன் நீ கேளடா!
இத்தரையில் எமக்குந்தான்
இருக்கும் உரிமைதானடா!

அணிவகுத்து முழங்கிவரும்
அலைகளென்ன ஆடுதோ!
பணிமுடித்து ஈழங்கொண்டு
பாசறைக்குத் திரும்புதோ!

விடுதலை விடுதலையென
வெற்றிக்களி கொள்ளுதோ!.
படுபாதகன் கொடுங்கோலனை
பிடித்திழுத்து வருகுதோ!

ஈழத்துப்பரணி பாடி
ஈழக்கொடி நாட்டுதோ!.
வேழமீது பவணியாக
வீரத்தமிழ் தோணுதோ!

எட்டுத்திக்கும் வென்ற தமிழ்
ஈழமீட்டித்துள்ளுதோ!.
இலங்கையினி எமதாகும்
என்றேபள்ளு பாடுதோ!!

தமிழர்குரல் ஒலிக்குதோ!
தனியீழம் உதித்ததோ!!
எவரெம்மை அடிமைசெய்வார்?
என்றே முரசு கொட்டுதோ!

கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment