Tuesday, 18 February 2014

நாடக அரசியல்.

பகைத்துக்கொள்ள மாட்டார்கள்

அரசியல்வாதிகள் நடிகர்களை
பகைத்துக் கொள்ளமாட்டார்கள
ஏனெனில் அவர்களிடம்தான்
ஓட்டு வங்கிகளும் உள்ளன.

தலைவர்கள் தொண்டர்களை
பகைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள்தான்
ஏவலுக்குதவும் அடியாட்கள்.

அமைச்சர்கள் அதிகாரிகளை
பகைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள்தான்
இவர்களுக்கு ஏஜண்டுகள்.

அதிகாரிகள் வட்டங்களை
பகைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள்தான்
அடியாட்களின் எஜமானர்கள்.

வட்டங்கள் செயலாளர்களை
பகைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் அவர்களிடம்தான்
ஏமாளிகள் ஏமாறுகிறார்கள்.

மக்கள் மட்டும் யாரையும்
பகைத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஏனெனில் எவர் வாழவைப்பார்?
எனத்தினமும் ஏங்குகிறார்கள்.

கொ.பெ.பி.அய்யா.



















No comments:

Post a Comment