அம்மா
அர்த்தம் என்ன பதிலிருக்கு.
அன்புக் கென்ன பொருளிருக்கும்
அம்மா என்றே விடை யிருக்கும்.
என் வலிக்கு அவளழுவாள்
தன்வலியை தான் மறைப்பாள்.
என் பசி அவளுணர்வாள்
அம்மா என்றே விடை யிருக்கும்.
என் வலிக்கு அவளழுவாள்
தன்வலியை தான் மறைப்பாள்.
என் பசி அவளுணர்வாள்
தன்பசியைத் தான் மறுப்பாள்.
அழுவது நானானால்
கண்ணீரை அவள் வடிப்பாள்.
ஏனென்று அறிவதற்கு
எந்த நூல் விடை படிக்கும்.
அன்னையவள் பாசத்திற்கு
அடுத்தென்ன சொல்லிருக்கும்.
என்ன ஏதும் சொல்லுவாளோ
அடுத்தென்ன சொல்லிருக்கும்.
என்ன ஏதும் சொல்லுவாளோ
நான் பட்ட கடன் கணக்கு.
அம்மா தந்தப் பால்க் கணக்கு அதற்கென்ன எழுத்திருக்கும்.
நோய்த் தடுப்பு மருந்ததற்கும்
தாய்ப்பாலே தீர்விருக்கும்.
தூங்காமல் விழித்ததற்கும்
தூக்கியென்னை வளர்த்ததற்கும்
வழிபார்த்துக் காத்திருப்பாள்.
தூக்கியென்னை வளர்த்ததற்கும்
வழிபார்த்துக் காத்திருப்பாள்.
வாசல் நின்று பாத்திருப்பாள்.
வரவென்ன நினைத்திருப்பாள்.
உறவொன்றே மகிழ்ந்திருப்பாள்.
நிறைவென்று நிறைந்திருப்பாள்
வரவென்னில் கரைந்திருப்பாள்.
தூளி சொன்னப் பாட்டுக்கும்
தோள் சுமந்தப் பாட்டுக்கும்
வாழ்ந்த அவள் கருவறைக்கும்
வரிக்கென்ன கணக்கிருக்கும்.
ஊட்டி ஊட்டி வளர்தாளுக்கு
ஊட்டி க் கடன் தீர்த்தேனோ!
ஊட்டி க் கடன் தீர்த்தேனோ!
நேர்த்திக் கடன் செய்தேனோ!
நேர்ந்து கடன் தீர்த்தேனோ!
என் பசி உணர்ந்தவளை,
தன் பசி மறந்தவளை,
ஊட்டியாளுக்கு ஊட்டி னேனோ!
ஒரு கடனும் தீர்த்தேனோ!
கழுவிக் காத்தத் தாயாளின்
கடன் குறைய என்ன செய்தேன்.?
வழுவி வழுவிக் கடந்தேனோ!
ஊட்டியாளுக்கு ஊட்டி னேனோ!
ஒரு கடனும் தீர்த்தேனோ!
கழுவிக் காத்தத் தாயாளின்
கடன் குறைய என்ன செய்தேன்.?
வழுவி வழுவிக் கடந்தேனோ!
நழுவி வழுவிக் கிடந்தேனோ!
மொழி தந்தாய் புரிவதற்கு.
வழி சொன்னாய் வாழ்வதற்கு.
பழிநேராக் காத்தக் கடன்
கழிப்பதெப்போ ஆத்தாளுக்கு?
மஞ்சம் நான் அமர்வதற்கு
பஞ்சமான வள்ளலுக்கு
வெஞ்சாமரம் வீசுதற்கு
வேண்டி நான் என்ன செய்தேன்.
என்னை யீன்ற தாயுனக்கு
என் பிள்ளை பரிசுனக்கு.
உன் பெருமை சொல்வதற்கு
உன் பேரே காப்பதற்கு!
கடன் பட்டேன் தாயுனக்கு!
கலங்குதே நெஞ்செனக்கு!
உடன் பட்டேன் நானுனக்கு
உற்ற தெய்வம் வேறெதற்கு?
தாயினும் சிறந்ததற்கு
தவம் உண்டோ பெறுவதற்கு?
கோயிலும் நீ எனக்கு!
குல தெய்வம் நீ எனக்கு
கவஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment