Saturday, 1 November 2025

சுந்தரத் தமிழ்.

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளேதமிழ்மகளேவா!வா!
கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழீழம் மலர்ந்ததென்றே வா!வா!
தமிழரிங்கு தலை நிமிர்ந்தோம் வா!வா!

தமிழாளுந் தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
அமிழ்தமே இலக்கியமே வா!வா!
ஆணவஞ்சிதைத்தவளே வா!வா!

உலகத்தின் தலைமகளே வா!வா!
விலகுமிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் கலைமகளே வா!வா!
பலமருளி பகையழித்தாய் வா!வா!

ஒற்றுமையின் உணர்வே நீ வா!வா!
பற்றுணர்த்துந் தாயே நீ வா!வா!
மாற்றாருந் தொழுவோளே வா!வா!
வேற்றுமை யொளித்தோளே வா!வா!

காற்றாகி மூச்சான கருணையே வா!வா!
ஊற்றாக உரிமையின் விளக்கமே வா!வா!
ஏற்றியே எந்நாளும் போற்றுவோம் வா!வா!
தூற்றினோம்  பூமழை புத்ததாண்டே வா!வா!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா..







No comments:

Post a Comment