இயற்கை அழுகிறது!
இயற்கை நானே அழுகிறேன்!
என்னை நீயே வதைப்பதால்!
செயலிழந்தேன் என் செய்வேன்
சிதைகிறேனே உன்னோலே!
என்னை மட்டும் பழிக்காதே!
உன்னை விட்டும் விலக்காதே!
முன்னை ஆய்ந்த அறிஞர்களும்
சொன்னதையும் மறக்காதே!
ஊழிக்கால மழையதுதான்
உணரத்தான் கேத்ரிநாத்!
இமயத்தின் பேரழிவாய்
இயற்கை எனது எச்சரிக்கை!
காடழித்து வீடமைத்தாய்!
கேடதுதான் கேத்ரிநாத்!
வீடெழுந்தும் சரிந்ததோ!
விபரீதம் நேர்ந்ததோ!
வாகனங்கள் புகைஊதல்
மேகமாக சேர்ந்த தூசி
தண்ணோசோன் கிழிந்ததோ!
விண்ணழுது அழிந்ததோ!
சமநிலை இழந்தேனோ!
எமநிலை ஆனேனோ!
இனியேனும் உணர்வாயோ!
இயற்கையெனை மதிப்பாயோ!
வெப்பம் தினம் உயர்கிறது!
தப்பாகிறது பருவங்கள்!
பனி உருகிப் பெருக்காகும்!
பேரலைகள் ஊரழிக்கும்!
கொதித்த ஆதி பூமியை
குளிர்வித்த கொட்டுமழை!
விதித்த விதி அதுவானால்
வெள்ளம்தான் உச்சநிலை!
உலகம் மட்டும் சுழலாம்!
உயிர்கள் மட்டும் வாழாது!
புத்துலகம் வளர்வதற்கும்
புல்லுங்கூட மிஞ்சாது!
எவர் இதனை பாடவில்லை
இவனின்று பாடிவிட்டான்!
கவனித்தால் நலமுண்டு!
காலத்தின் துணையுண்டு!
கவிஞர் கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment