கள்ளக்குறிச்சி
தாய்ப்பால போலகள்ளு தந்த பனை கதறுதய்யோ!
மாய்ந்து சாயும் சேய்களுக்கு தாய்ப்பாலுந் தடையோ அய்யோ!
அவணியெங்கும் அவலக்குரல்
அறுந்துவிழும் தாலிக்குவியல்,
வித்தகாசும் போதுந்தானோ!-இந்தா
செத்ததெல்லாம் வித்திடய்யோ!
கள்ளக்குறிச்சி கண்ணீராறோ
எல்லைமீறி ஓடுதய்யோ!
நாடெங்கும் பேராச்சோ
கேடோங்கும் சாவாச்சோ!
போதைக்கிது வியாபாரமோ
வாதைக்கிது சாபமோசமோ!
வெந்த மனம் நீரல்லய்யோ-அந்த
வேசிமக்கள் சோரல்லய்யோ
கள்ளத்தன சாராயம் கண்டாரோ மாண்டாரோ!
கொல்லத்தான் வித்தாரோ கொலகாரப் பாவிகளோ!
என்ன பாவம் செஞாசோமோ
எம்தாலி அறுத்தீரோ!
விசத்தை வித்தும் வாழலாமோ-அந்த
நிசத்தச் சொல்லி மாளலாமே!
தாய்ப்பாலும் கள்ளிருக்க
தாய்போல சொல்லிருக்க,
கொலகாரப் பாவி வித்த
கொடியவிசம் குடிச்சீரய்யோ!
பொண்டாட்டி புள்ளைகள
திண்டாட விட்டீரய்யோ!
என்னய்யோ சொல்லி அழ-இன்னும்
பெண்டு நாங்கள் விதவையய்யோ!
கொ. பெ. பி. அய்யா.
No comments:
Post a Comment