Tuesday 18 February 2014

ஹலோ காலன்.

ஹலோ !காலன்தான் பேசுகிறேன்!!!

காதில் ஹாரன் ஒலி கேட்கவில்லை--தூதன்
ஊதுஞ் சங்கொலியும் உனக்குக் கேட்கவில்லை.
காலன்  ஹலோ சொன்னதும் எமனவன்
வேலையை  எளிதாக முடிக்கிறான்!


கொ.பெ.பி.அய்யா.




அரசியல் வேண்டாம்.

வேறு வேலை என்ன?

அரசியல் வேண்டாமே!
ஆதாயந்தரும் வேறு
வியாபாரம்  பண்ணலாமே!
அதுதான்  உங்களுக்கு
சரியாக  இருக்கும்........

என்ன  சொல்கிறீர்?
புரியவில்லை.................!
ஓகோ...............................
புரியும் விதத்தில் பேசத்
தெரியாதோ!
புரிந்து  கொண்டால்
தொண்டர்கள்-
நிற்கமாட்டார்களோ!

தொடரட்டுமுங்கள்
தொழில் .இதைவிட
இலாபம்  வேறெதில்
இருக்கப்  போகிறது.!

எதற்கும் கண்ணாடியில்
ஒருமுறை முகத்தைப்
பார்ததுக்  கொள்ளுங்கள்.!

உங்களைப் பார்த்தால்
உங்களுக்கே கேவலமாகத்
தோன்றவில்லையா?

==============================

சுனாமி.

வேண்டாம் சுனாமி!

கால்களைக் கழுவுகிறாய்.
கரவோசை எழுப்புகிறாய்..
வரவேற்புச் செய்கிறாய்..
வந்திருப்போன் கவிஞனென்றோ!

நன்றி!நன்றி!வாழி நீ!
நானுமுன்னைப் பாடுகிறேன்..
ஆனாலும் கோபம்தான்.........
அனுப்பியதேனோ சுனாமியை!

உயிர்கள் யாவும் உன்னில்தானே
உதயம் செய்தாய் ஆதியிலே.
தாயான நீயே எம்மை
தவிக்கச் செய்தல் நீதியாமோ!

உணவளிக்கும் களஞ்சியமே!
உரிய தேவைப் பொக்கிசமே!
கரையில்லாக் கருணையே!
கடலம்மா வாழ்க நீயே.!

வானந் தந்த நிறமழகு.
வணங்குமவன் செயலழகு.
காற்றனுப்பும் உன்னலைகள்
கானம் பாடும் இசையழகு.

கூடியெழுகிற கதிரவனழகு.
ஓடித்துள்ளும் மீன்களழகு.
மயக்குமினிய மதியொளியழகு.
மௌனம் பேசும் காற்றுமழகு.

இனியொரு சுனாமி  
எப்போதும் செய்யாதே..!
துணை காப்பாய் நீயம்மா!
இணையில்லாத் தாயம்மா!



கொ.பெ..அய்யா.




வீடொன்று சொந்தம் வேண்டும்.

வேண்டும்! வேண்டாம்!.

வீடொன்று சொந்தம் வேண்டும்.
காடழித்து வீடு வேண்டாம்
கழனிசெய்யக் காணி வேண்டும்.
காணியொழி மனைகள் வேண்டாம்.

நதிகளல்லாம் இணைய வேண்டும்.
நாட்டிலினி பஞ்சம் வேண்டாம்.
நாடொன்றாய் ஆகவேண்டும்.
நமக்குள்ளே சண்டை வேண்டாம்.

வேளாண்மை வாழ வேண்டும்.
ஆளாண்மை வீழ வேண்டாம்.
தொழிலாண்மை பெருக வேண்டும்.
தூரம்போமை மறுக வேண்டாம்.

தானியங்கள் பெருக்க வேண்டும்.
தரிசாதல் நெருக்க வேண்டாம்.
ஏற்றுமதிச் சிறக்க வேண்டும்.
இறக்குமதித் திறக்க வேண்டாம்.

கிராமங்கள் செழிக்க வேண்டும்.
கிரமமதை மழிக்க வேண்டாம்.
பட்டிகள் நிலைக்க வேண்டும்
பட்டணம் நினைக்க வேண்டாம்.

அரசியல் தொடர வேண்டும்.
விரசியல் படர வேண்டாம்.
கட்சிகள் சுருக்கு வேண்டும்.
காழ்ப்புணர்க் குறுக்கு வேண்டாம்.

மேடைமொழிப் பேச்சு வேண்டும்.
பேடையிழிக் கூச்சல் வேண்டாம்.
செதுக்கு உறைச் சீர்மை வேண்டும்.
வெதுப்பு முறைச் சோர்மை வேண்டாம்

பொதுவுநலத் தூய்மை வேண்டும்.
பதுக்குமலப் பேய்மை வேண்டாம்.
எதிர்ப்பு நிறை வாய்மை வேண்டும்
குதர்க்கத் துரைத் தீய்மை வேண்டாம்.

கொள்கையிற் திடம் வேண்டும்.
கொள்வதில் மடம் வேண்டாம்.
வெல்வதிற் செயல் வேண்டும்.
கொள்வதில் மயல் வேண்டாம்.

அன்புள்ளம் இருக்க வேண்டும்.
அன்பில்லம் முளைக்க வேண்டாம்.
தன்னிறைவு ஆக்க வேண்டும்.
பொன்விழைவுப் பூக்க வேண்டாம்.

தன்மனைக் காதல் வேண்டும்.
பிறன்மனைத் தேடல் வேண்டாம்.
சன் மார்க்கப் பாதை வேண்டும்.
வன்னோக்கப் போதை வேண்டாம்.

தேவைகள் சமம் வேண்டும்.
காவல்கள் சேமம் வேண்டாம்.
ஆசைகள் நலம் வேண்டும்
அடைபாவத் தூபம் வேண்டாம்,

நியாயங்கள் நெஞ்சில் வேண்டும்.
நீதிமன்றம் நாட வேண்டாம்
சத்தியம் போற்ற வேண்டும்.
சட்டங்கள் ஏற்ற வேண்டாம்.

அனைவர்க்கும் கல்வி வேண்டும்.
அதுபேரம் ஆக வேண்டாம்.
வாழவொரு வேலை வேண்டும்.
ஆனபின் ஊழல் வேண்டாம்.

உழைப்பதில் உண்மை வேண்டும்.
பிழைப்பதிற் சிறுமை வேண்டாம்.
கடமையிற் திண்மை வேண்டும்.
உடமையில் வன்மை வேண்டாம்.

வேதங்கள் படிக்க வேண்டும்.
பேதங்கள் பேச வேண்டாம்
பண்பினைப் பழக வேண்டும்.
பாவங்கள் நிலவ வேண்டாம்.

கொண்டதிற் பற்று வேண்டும்.
பணடதிற் அற்று வேண்டாம்.
தொண்டதிற் கட்டு வேண்டும்.
மண்டதிற் கெட்டு வேண்டாம்.

சமுதாயம் ஒன்று வேண்டும்.
சாதிகள் என்று வேண்டாம்
பேசவொரு மொழி வேண்டும்.
பிறமொழிகள் இழி வேண்டாம்.

காதல் மண்ணில் மீள வேண்டும்.
சாதி மதம் ஆள வேண்டாம்.
மனிதம் கண்ணில் ஒளிர வேண்டும்.
மடமை நெஞ்சில் துளிர வேண்டாம்.

சமத்துவம் அடைய வேண்டும்.
சலுகைகள் விழைய வேண்டாம்.
எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்.
இல்லாமை இருக்க வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.





வேகம் வேண்டாம்.

வேகம் எதற்கு?

இத்தனை வேகமெதற்கு?
அத்தனை அவசரமோ உமக்கு!!
அவசியமான அவசரமானாலும்
விவேகமான வேகமானாலும்
விளைவுக்கு உத்ரவாதமில்லை.
விளக்கிட வேறெதுவுமில்லை.

அவசரமும் வேகமும்.அனுபவமின்மை.
திடீர்த் திட்டஙகளும் திடீர் முடிவுகளும்.
அவசர வேகங்களின் அன்னை தந்தை.
காலத்தின் வேகத்திற்கு ஈடிருக்கலாம்
காலத்தை முந்தும் முயறசி வேண்டாம்.
காலமெப்போதும் அவசரப்படுவதில்லை..

வேகப்பயணமே மகிழ்ச்சியானால்
போகுமிடமோ பூமியைத் தாண்டுமே!
ஆகுஞ்செயலுக்கு அவசரமாகாது.
ஆவது நலமானால் போவதெது?
வாழத்தானே முயலுகின்றோம்
வேறெதற்கு வேகமோ!அவசரமோ!

பொறுமை வாழ்கவென்றேனே
புரியவில்லையோ உமக்கு.!!
பிறவி கிடைத்ததே அதிசயம்.
பேணுவதெவ்வளவு அவசியம்!
அவசரமும் வேகமும் ஆபத்தின்
அழைப்பென்றே அறிவீரேவாழ்வீரே!!


கொ.பெ.பி.அய்யா.







வெள்ளை வெளுத்திடும்.

வெளுத்திடுமா வெள்ளை?

பொழுதும் வெளுத்து அலுத்துவிட்டேன்--நானும்
புறப்படத்தான் போகின்றேன்.
அழுதும் முடித்து ஓய்ந்துவிட்டேன்--பின்னும்
ஆயிரமாய் தொடர்வாரே!

அழுக்கும் தொலைந்து ஒழியவில்லை--ஏனோ
வெளுத்தும் வெள்ளை ஆகவில்லை.
இழுக்கும் கலைந்து அழியவில்லை--நானோ
வெளுத்தும் பயனுமில்லை.

தினமும் வெளுத்திருந்தால் நலமே--தூய்மை
துணியில் தொடர்ந்திருக்கும்.
என்றோ வெளுத்தயிது முழுமை--வெளுமை
இன்றே ஒளிர்ந்தும் மிளிராது.

வள்ளுவன் காலம் தொட்டுப் புலவர்--எல்லாம்
அள்ளி வெளுத்துவிட்டார்.
இன்னும் தீரவில்லை வெளுத்தும்--அதனால்
ஒன்னும் மாறவில்லை,

ஆசை அழுக்கினை அகற்றிடப் புத்தன்--அவனும்
அலசித் துவைத்தாலும்
வேசை போலவே விடாது பற்றி--மனிதம்
வெளுத்த பாடில்லையே!

புத்தன் வெளுத்தும் அழியா மலங்கள்--இவை
எத்துணைதான் வெளுத்திடும்
சித்தம் மாசில் புத்தம் பேசுங்கொடிய--அவனின்
பித்தம் யார் வெளுப்பார்?

உயிர்கள் வதையா மனிதம்  தானே--மதங்ள்
உரைக்கும் மறைமொழிகள்.
உள்ளம் வெளுக்க எழுந்ததுதானே--வதங்கள்
உலகில் செய்திடுமோ!

ஊழல் கறையோ ஒழிந்த பாடில்லை--ஆடை
கிழியும் வரையும் அழியாது.
சாதி மதப் புகையிலைக்கறையை--கரை
வேதி மருந்தும் வெளுக்காது

தர்மம்  வெளுக்க உழைத்தது--எல்லாம்
வர்மச் சேறாய் ஆனது.
கர்மம் கண்ணாய் வெளுத்தாலும்--தீய
கறையொழிந்தும் தீராது.

தீரா அழுக்கை பூராம் வெளுக்குமோ--தீர
ஊராச் சேர்ந்து வெளுத்து
தாரா வெள்ளை ஆராக் காத்து--மனது
நேராய் வாழப் பழக்லாம்.

கொ.பெ.பி.அய்யா..







அரசுத் துறை.

வீணாத்தான் போனதோ!

வருவாய் தருவாய் பெறுவாயென
தெருவாசல் நின்றழைக்கும் வேசியென
அரசுத் துறையினரும் இழிக்கிறார்
கருமஞ் செய்திடவும் கைக்கூலி கேட்கிறார்.

வசூல் ராசாக்களின் கோட்ட அலுவலங்கள்
மாமூல் தாதாக்களின் வட்டார மையங்கள்.
சுங்கப் பங்குகளாய் அங்கங்கு வேட்டைகள்.
எங்கும் கொள்ளைகள் இவர்களே காவலர்கள்!.

இதுதான் சாதனையோ!
இதற்குத்தான் சுதந்திரமோ!
எத்தனை தியாகங்கள்!
எத்தனை உயிர் பலிகள!
அடசண்டாள நீசர்களே!!
விடுதலைப் போராட்டமே
வீணாத்தான் போனதோ!
வீணரிடம் அடிமையோ!

கொ.பெ.பி.அய்யா