Tuesday 18 February 2014

சிந்திய மணிகள்.

அய்யாவின் சிந்திய மணிகள்!
=================================
தோள்களில் சுமந்த தந்தையை ----உன்
நாள்களில் சுமந்து போற்றுக ! 
============================
இருக்கா இருக்கானு
இருப்பதையே கேட்டால்
இல்லாதது அழும்!
இருப்பதே சிரிக்கும்!
=========================
மக்கும் குப்பைகள்
மக்கள் அப்பாவிகள் .
மக்காத குப்பைகள்
மாக்கள் பெருச்சாளிகள்.
சிக்கித்தவிக்கும்
சுதந்திரம் பாவம் !
நக்கிப்பிழைக்கும்
நாய்கள் ஒழிவதெப்போ?
முக்கி உழைக்கும்
முடிமன்னர்கள்
வாழ்வதெப்போ?
================================================
பதுங்கிய வேங்கையோன்று
பகீரென பாய்வதுபோல்
ஒதுங்கிய நாளுக்கெல்லாம்
ஒதுக்கி வைத்து சீறுவது போல்
வதங்கிய நாற்றுக்கேல்லாம்
வாரி வாரி ஊற்றுவது போல்
செதுக்குவீர் சீர்கவிதை
சிந்தை குளிர்ந்தேனம்மா!
செல்லம் என் கவிக்கண்மணிகளே!
===============================================
இல்லை சோறு என்றாலும்
தொல்லை நீ என்றாலும்
பிள்ளை நீ இருந்தால் போதுமே
செல்லமே என் செல்லமே !
எனக்கொஞ்சுவதுதானே
பெத்த மனசு.
==============================================
நியாயமான கோபமாக இருந்தால் நல்லதுதானே !
எவனுக்குள் கோபம் கொப்பளிக்கிறதோ !
அவனுக்குள் உணர்வுகள் விழித்திருகின்றன!
எதன்மீது கோபமோ அதனிடம் ஏதோ ஒன்று சரியில்லை !
அதுதானே !அதை சரி செய்ய என்ன செய்யலாம் !
அதை யோசியுங்கள் !அப்போது அந்த கோபமும்
நன்மையாகும்
=============================================================
அந்த சித்திரம்கூட கவிதை சொல்லுதே!
இந்த எஜமானுக்கு அந்த
குழந்தை செய்த சேவையும் இதுவோ!
பிடுங்கப்பட்ட பேனா விடுபட்டாலும்
தொடங்கப்பட்ட கவிதை திசை மாறினாலும்
அடங்குமோ சிந்தை அது சொல்ல நினைக்கும்
ஆக்கம் படைப்பாகும்வரை !
பிறக்க முயல்வதை பிரசவித்து விடுங்கள் !
சிறக்க வருவதை சிறைவைப்பது பாவம் !
விட்டுவிடுங்கள் வெளிவரட்டும்!
கொட்டுவதை கொட்டட்டும் !
தட்டி அது எழுப்பட்டும் !
தமிழுக்கு உதவட்டும் !
================================================
தனிமையில்தான் அந்தக்கொடுமை என்றால்
அப்புறம் ஏன் அந்த தனிமை தாகம் .
அந்தக்கருமத்தை தொலைத்துவிட்டு
சமூகமாக வேண்டியதுதானே .
கலந்துபேசி மீண்டும் நண்பர்களோடு
ஐக்கியம் ஆகிவிட்டால் மனசு இலேசாகும்
தனிமை தொலையும் .சகசநிலை திரும்பும்..
இயல்பான பணிகள் என்றும்போல் தொடரும் .

அங்கங்கு விளம்பரத்தட்டிகள் வைத்துதான்
ஆயுதம் வேண்டாம் என்றோம்
ஆயுத எழுத்தே வேண்டாம் என்றோமா!
என நினைவூட்டலாம் .
நான் விட்ட குறைகளை நீ தொட்டாய்.
நீ விட்ட குறைகளை இன்னும் பலர் நிறைப்பர்.
இவ்வாறே கவிஞர்கள் தொடராகப் பிறப்பர்.
முன்னவர் சொல்லியதை பின்னவர்
தொடர்வர்.
சொல்லப்பட்ட உண்மைகளே சுடச்சுடப்
புதுமைகளாகும் .
மறைந்த ஞானிகளே மீண்டும் மீண்டும்
பிறந்தும் தொடரலாம்.
ஞானிகளே பிறந்தும் மறைந்தும் பிறந்தும் தொடர்வர்,
ஞானங்கள் நிறைந்து நிறைந்து வளர்ந்து
பெருகும்.
ஏனங்கள் மாறுகின்றன ஞானங்கள்
தொடர்கின்றன.
உலகம் வாழ்ந்து கொண்டே வளர்ந்து
வாழ்கிறது.
எழுதவேண்டும் என்பதற்காக எழுதுபவன் உயரமாட்டன்.
உழவேண்டும் என்பதற்காக உழுபவனும் தேறமாட்டான்
வளம் கண்டு ஓடுபவன் வாழ மாட்டான்.
உளம் கொண்டு தேடுபவன் வீழ மாட்டான்.
===============================================================

கருப்பராய் பிறந்தவர்கள்தான்  
உருப்படியான உன்னதங்களை
பொறுப்பாய் நிகழ்த்தி இன்னும்
மனித நெஞ்சங்களில் நின்று வாழ்கின்றனர்...

மார்ட்டின் லூதர் அண்ணல் காநதி,
.வெ.ரா போன்ற கருப்பு மனிதர்களே
ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் உயர்ந்திட
பாடுபட்டுப் பகலவர்களாக ஒளி செய்கின்றனர்..

அண்ணல் காட்டிய விடியலால் அரசியல் சாரா
அப்துல் கலாம் நமது குடியரசுத் தலைவரானார்.
பகுத்தறிவாளர் ஈரோட்டுத் தந்தையால்தான்
பச்சிகள் சுடும் ஒரு குறவர் குலத்தானும்
உச்சநிலை அதிகாரியாகிட் முடிந்தது.
வெள்ளையரின் ஆதிக்கமான அமெரிக்காவிலும்
கருப்பர் இன ஒபாமா அந்நாட்டின் அதிபரானதும்
மார்ட்டின் லூதரின் மகத்தான சாதனையால்தான்.

பெரியாரால் வீட்டுக்கும் வேற்றுமைக்கும் விடுதலை!!
அண்ணலால் நாட்டுக்கும் மக்களுக்குபம் விடுதலை!!
மார்டடினால் நிறத்துக்கும் இனத்துக்கும் விடுதலை!!
========================================================
நன்றி!!
கொ.பெ.பி.அய்யா.


 அய்யாவின் சிந்திய மணிகள்!
=================================
தோள்களில் சுமந்த தந்தையை ----உன்
நாள்களில் சுமந்து போற்றுக ! 
============================
இருக்கா இருக்கானு
இருப்பதையே கேட்டால்
இல்லாதது அழும்!
இருப்பதே சிரிக்கும்!
=========================
மக்கும் குப்பைகள்
மக்கள் அப்பாவிகள் .
மக்காத குப்பைகள்
மாக்கள் பெருச்சாளிகள்.
சிக்கித்தவிக்கும்
சுதந்திரம் பாவம் !
நக்கிப்பிழைக்கும்
நாய்கள் ஒழிவதெப்போ?
முக்கி உழைக்கும்
முடிமன்னர்கள்
வாழ்வதெப்போ?
================================================
பதுங்கிய வேங்கையோன்று
பகீரென பாய்வதுபோல்
ஒதுங்கிய நாளுக்கெல்லாம்
ஒதுக்கி வைத்து சீறுவது போல்
வதங்கிய நாற்றுக்கேல்லாம்
வாரி வாரி ஊற்றுவது போல்
செதுக்குவீர் சீர்கவிதை
சிந்தை குளிர்ந்தேனம்மா!
செல்லம் என் கவிக்கண்மணிகளே!
===============================================
இல்லை சோறு என்றாலும்
தொல்லை நீ என்றாலும்
பிள்ளை நீ இருந்தால் போதுமே
செல்லமே என் செல்லமே !
எனக்கொஞ்சுவதுதானே
பெத்த மனசு.
==============================================
நியாயமான கோபமாக இருந்தால் நல்லதுதானே !
எவனுக்குள் கோபம் கொப்பளிக்கிறதோ !
அவனுக்குள் உணர்வுகள் விழித்திருகின்றன!
எதன்மீது கோபமோ அதனிடம் ஏதோ ஒன்று சரியில்லை !
அதுதானே !அதை சரி செய்ய என்ன செய்யலாம் !
அதை யோசியுங்கள் !அப்போது அந்த கோபமும்
நன்மையாகும்
=============================================================
அந்த சித்திரம்கூட கவிதை சொல்லுதே!
இந்த எஜமானுக்கு அந்த
குழந்தை செய்த சேவையும் இதுவோ!
பிடுங்கப்பட்ட பேனா விடுபட்டாலும்
தொடங்கப்பட்ட கவிதை திசை மாறினாலும்
அடங்குமோ சிந்தை அது சொல்ல நினைக்கும்
ஆக்கம் படைப்பாகும்வரை !
பிறக்க முயல்வதை பிரசவித்து விடுங்கள் !
சிறக்க வருவதை சிறைவைப்பது பாவம் !
விட்டுவிடுங்கள் வெளிவரட்டும்!
கொட்டுவதை கொட்டட்டும் !
தட்டி அது எழுப்பட்டும் !
தமிழுக்கு உதவட்டும் !
================================================
தனிமையில்தான் அந்தக்கொடுமை என்றால்
அப்புறம் ஏன் அந்த தனிமை தாகம் .
அந்தக்கருமத்தை தொலைத்துவிட்டு
சமூகமாக வேண்டியதுதானே .
கலந்துபேசி மீண்டும் நண்பர்களோடு
ஐக்கியம் ஆகிவிட்டால் மனசு இலேசாகும்
தனிமை தொலையும் .சகசநிலை திரும்பும்..
இயல்பான பணிகள் என்றும்போல் தொடரும் .

அங்கங்கு விளம்பரத்தட்டிகள் வைத்துதான்
ஆயுதம் வேண்டாம் என்றோம்
ஆயுத எழுத்தே வேண்டாம் என்றோமா!
என நினைவூட்டலாம் .
நான் விட்ட குறைகளை நீ தொட்டாய்.
நீ விட்ட குறைகளை இன்னும் பலர் நிறைப்பர்.
இவ்வாறே கவிஞர்கள் தொடராகப் பிறப்பர்.
முன்னவர் சொல்லியதை பின்னவர்
தொடர்வர்.
சொல்லப்பட்ட உண்மைகளே சுடச்சுடப்
புதுமைகளாகும் .
மறைந்த ஞானிகளே மீண்டும் மீண்டும்
பிறந்தும் தொடரலாம்.
ஞானிகளே பிறந்தும் மறைந்தும் பிறந்தும் தொடர்வர்,
ஞானங்கள் நிறைந்து நிறைந்து வளர்ந்து
பெருகும்.
ஏனங்கள் மாறுகின்றன ஞானங்கள்
தொடர்கின்றன.
உலகம் வாழ்ந்து கொண்டே வளர்ந்து
வாழ்கிறது.
எழுதவேண்டும் என்பதற்காக எழுதுபவன் உயரமாட்டன்.
உழவேண்டும் என்பதற்காக உழுபவனும் தேறமாட்டான்
வளம் கண்டு ஓடுபவன் வாழ மாட்டான்.
உளம் கொண்டு தேடுபவன் வீழ மாட்டான்.
===============================================================

கருப்பராய் பிறந்தவர்கள்தான்  
உருப்படியான உன்னதங்களை
பொறுப்பாய் நிகழ்த்தி இன்னும்
மனித நெஞ்சங்களில் நின்று வாழ்கின்றனர்...

மார்ட்டின் லூதர் அண்ணல் காநதி,
.வெ.ரா போன்ற கருப்பு மனிதர்களே
ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் உயர்ந்திட
பாடுபட்டுப் பகலவர்களாக ஒளி செய்கின்றனர்..

அண்ணல் காட்டிய விடியலால் அரசியல் சாரா
அப்துல் கலாம் நமது குடியரசுத் தலைவரானார்.
பகுத்தறிவாளர் ஈரோட்டுத் தந்தையால்தான்
பச்சிகள் சுடும் ஒரு குறவர் குலத்தானும்
உச்சநிலை அதிகாரியாகிட் முடிந்தது.
வெள்ளையரின் ஆதிக்கமான அமெரிக்காவிலும்
கருப்பர் இன ஒபாமா அந்நாட்டின் அதிபரானதும்
மார்ட்டின் லூதரின் மகத்தான சாதனையால்தான்.

பெரியாரால் வீட்டுக்கும் வேற்றுமைக்கும் விடுதலை!!
அண்ணலால் நாட்டுக்கும் மக்களுக்குபம் விடுதலை!!
மார்டடினால் நிறத்துக்கும் இனத்துக்கும் விடுதலை!!
========================================================
நன்றி!!
கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment