Tuesday 18 February 2014

வேகம் வேண்டாம்.

வேகம் எதற்கு?

இத்தனை வேகமெதற்கு?
அத்தனை அவசரமோ உமக்கு!!
அவசியமான அவசரமானாலும்
விவேகமான வேகமானாலும்
விளைவுக்கு உத்ரவாதமில்லை.
விளக்கிட வேறெதுவுமில்லை.

அவசரமும் வேகமும்.அனுபவமின்மை.
திடீர்த் திட்டஙகளும் திடீர் முடிவுகளும்.
அவசர வேகங்களின் அன்னை தந்தை.
காலத்தின் வேகத்திற்கு ஈடிருக்கலாம்
காலத்தை முந்தும் முயறசி வேண்டாம்.
காலமெப்போதும் அவசரப்படுவதில்லை..

வேகப்பயணமே மகிழ்ச்சியானால்
போகுமிடமோ பூமியைத் தாண்டுமே!
ஆகுஞ்செயலுக்கு அவசரமாகாது.
ஆவது நலமானால் போவதெது?
வாழத்தானே முயலுகின்றோம்
வேறெதற்கு வேகமோ!அவசரமோ!

பொறுமை வாழ்கவென்றேனே
புரியவில்லையோ உமக்கு.!!
பிறவி கிடைத்ததே அதிசயம்.
பேணுவதெவ்வளவு அவசியம்!
அவசரமும் வேகமும் ஆபத்தின்
அழைப்பென்றே அறிவீரேவாழ்வீரே!!


கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment