Monday 17 February 2014

கண்ணீர் தேசம்.

கண்ணீர் தேசம்.

இனியொரு கலி வருமோ!
மனிதர்க்குக் கிலித் தருமோ!!
ஏரோதைப் போலவே
ஊரழியச் செய்யுமோ!

மனித உரிமைச் சாகுமோ!
மனித வேட்டை ஆடுமோ!
கொத்துக் கொத்தாய் மனிதயினம்
கொல்லப்பட்டும் அழியுமோ!.

குடும்பங்கள் சிதையுமோ!!
குழந்தைகளும் அனாதையோ!!
விதவையான பெண்களும்
விலையாகி இழிவரோ!!

சேரமறுக்கும் பெண்களை
சேலை நீக்கி சிதைக்குமோ!.
பச்சிளங் குழந்தைகளை
பாலியிலில் வதைக்குமோ!

வீடிலிழந்த வாழ்வாமோ!
காடழிந்து கழனி போமோ!
உணவையும் பறிக்குமோ1
துணியையும் எரிக்குமோ!

கணவன் முன்னே கற்பழியும்
காட்சிகளும் இரசிக்குமோ!
பிணமான பின்னுங்கூட
பிறப்புறுப்பைக் கடையுமோ!

பள்ளிச் செல்லும் வயததிலே
துள்ளி யாடும் பிஞ்சுகள்
கொள்ளி வயிற்றுப்ப் பசியிலே
கிள்ளி மண்ணைத் திண்ணுமோ!

படிக்கும் பள்ளிக் குச்சுகளை.
இடித்துத்தான் நொறுக்குமோ!.
மடியும் பிணி மனைகளையும்
இடி குண்டால் அழிக்குமோ! ..

இறந்த மனித உறுப்புக்களை
தெருநாய்க்கு எறியுமோ!
பருவநிலை மங்கையரை
சிறு முலைகள் திருகுமோ!.

பாலுக்கழும் குழந்தைகளை
கால் கசக்கி நசுக்குமோ!
பாலணைக்கும் தாயினை
படுக்கையிலே சிதைக்குமோ!

இப்படியும் கொடுமைகள்
எந்தக்கலி செய்யுவான்.
அந்த்கலி வென்றதாக!
அப்படியும் கதையுண்டோ!

ஏரோதை ஒழித்திடவே
ஏசுவே பிறந்து வந்தார்.
கீசகனை அழித்திடவே
கிருட்டிணரும் அவதரித்தார்.

கண்ணீரே புரளுமோ!
உண்ணீரும் பஞ்சமாமோ!
செந்நீரும் ஊறுமோ!
எந்நநாளும் போராமோ!

இப்படித்தான் தமிழினம்
இலங்கையில் மடிகிறது.
இருண்ட வனம் மறைந்தயிவர்
என்று காண்பர் விடியலை!

கண்ணீரே கரைபுரண்டு
கடல் நோக்கிப் பாயுது.
உண்ணீரே கிடைக்காது
உடல் காய்ந்து சாயுது.

கண்ணீரின் தேசமது
கன்னிதமிழ் ஈழந்தான்
எந்நாள்தான் மீளுமோ
ஏங்குதே தமிழினம்.

உரிமைக்குப் போராட்டம்
உயிர் விலை கொடுக்கிறோம்.
நீலக்கடல் சிவந்தது.
!.ழக்கரை எழுந்தது.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment