Monday 17 February 2014

தமிழ் இனிதா தூங்குமோ!

தமிழினித் தூங்குமோ!

இனியொரு கலி வருமோ!
மனிதர்க்கு கிலி தருமோ!!
ஏரோதைப் போலவே
ஊரழியச் செய்யுமோ!

மனித உரிமை சாகுமோ!
மனித வேட்டை ஆடுமோ!
கொத்துக் கொத்தாய் மனிதயினம்
கொல்லப்பட்டு அழியுமோ!.

குடும்பங்கள் சிதையுமோ!!
குழந்தைகளும் அனாதையோ!!
விதவையான பெண்களும்
விலையாகி இழியுமோ!!

சேரமறுக்கும் பெண்களை
சேலை நீக்கி சிதைக்குமோ!.
பச்சிளங் குழந்தைகளை
பாலியிலில் வதைக்குமோ!

வீடிழந்த வாழ்வாமோ!
காடழிந்து கழனி போமோ!
உணவையும் பறிக்குமோ1
துணியையும் எரிக்குமோ!

கணவன் முன்னே கற்பழியும்
காட்சிகளும் இரசிக்குமோ!
பிணமான பின்னுங்கூட
பிறப்புறுப்பைக் கடையுமோ!

பள்ளி செல்லும் வயததிலே
துள்ளி ஆடும் பிஞ்சுகளோ
கொள்ளி வயிற்றுப்ப் பசியிலே
கிள்ளி மண்ணைத் திண்ணுமோ!

படிக்கும் பள்ளிக் குச்சுகளை.
இடித்துத்தான் நொறுக்குமோ!.
மடியும் பிணி மனைகளையும்
இடி குண்டால் அழிக்குமோ! ..

இறந்த மனித உறுப்புக்களை
தெருநாய்க்கு எறியுமோ!
பருவநிலை மங்கையரை
சிறு முலைகள் திருகுமோ!.

பாலுக்கழும் குழந்தைகளை
கால் கசக்கி நசுக்குமோ!
பாலணைக்கும் தாயினை
படுக்கையில் சிதைக்குமோ!

அங்கங்கு குண்டு மழை
அப்பாவி சாவுகள்.
ஆள் கடத்தல் கொலையென
நாள் தோறும் நிகழ்வுகள்.

கண்ணீரே புரளுமோ!
உண்ணீரும் பஞ்சமாமோ!
செந்நீரும் ஊறுமோ!
எந்நநாளும் போராமோ!

உலகம் எங்கே போகிறது?
கலகம் பொங்கி சாகிறது.
கலிதான் வந்திட்டானோ!
பலிதான் தந்திட்டோமோ!

இப்படியும் கொடுமைகளோ!
எந்தக்கலி செய்வானோ!
அந்த்கலி வென்றானோ!
அப்படியும் கதையுண்டோ!

உரிமைகள் பறிக்கப்பட்டால்
உருவாகிறான் போராளி!!
சிறைகளுக்கும் அஞ்சமாட்டான்.
திரைகளாய் பொங்குவான்!

தீமைகள் தீண்டும்போது
ஊமைகளும் வாய்திறக்கும்!
ஆமைகளும் கால்பரப்பும்
அணிதிரளும் உரிமைக்கு!

ஏரோதை ஒழித்திடவோ
ஏசுவே பிறந்து வந்தார்.
கீசகனை அழித்திடவோ
கிருட்டினரே அவதரித்தார்.

பரங்கியரை விரட்டிட
பரதேசி காந்தி வந்தான்!
உறங்குமோ தமிழினி
ஓட்டுவோம் கலியவனை!

வலிபட்ட உணர்வகளோ!
எலி செத்த மரப்புகளோ!
புலியெனப் பாய்வான் கல்கி!
கலியினை மாய்ப்பான் உறுதி!

கொ.பெ,பி.அய்யா.










No comments:

Post a Comment