Tuesday 18 February 2014

எழுக நண்பா.

எழுகவே!விரைகவே!

எழுகவேநண்பாவிரைகவே!
ஈழநாடு பெற்றிடவே எழுகவே!
எழுகவேநண்பாவிரைகவே
வீட்டுக்கொரு புலியெனவே
எழுகவேநண்பாவிரைகவே!

வீறுகொண்டு அணியணியாய்
எழுகவேநண்பாவிரைகவே!
ஆறுபோன்று ஆர்ப்பரித்து
எழுகவேநண்பாவிரைகவே!

தமிழனென்று சொல்லுவோம்
தலைநிமிர்த்தி செல்லுவோம்..
ஒன்றுபட்டுத் தமிழினம்..
எழுகவேநண்பாவிரைகவே!

அறவழியே பற்றுவோம்.
அகிம்சை நெறி போற்றுவோம்.
உரிமைக்குரல் ஏற்றுவோம்.
எழுகவேநண்பாவிரைகவே!

மாணவரின் வலிமையே
மண்ணுணர்ந்த உண்மையே
மறுநினைவு  செய்யவே
எழுகவேநண்பாவிரைகவே!

அறுபத்தைந்தின் எழுச்சியே
அகிலங்கண்ட காட்சியே
அணிதிரண்டு உணர்ததவே
எழுகவேநண்பாவிரைகவே!

தீப்பொறிக் கணங்களாம்.
திக்குநோக்கிப் பாயுவோம்.
காற்றுத்தீயாய் பரவுவோம்
எழுகவேநண்பாவிரைகவே!

அனுமனின் படையிதாம்
ஆழ்கடலும் என்னவாம்!
ஈழமதை மீட்டுவோம்.
எழுகவேநண்பாவிரைகவே!

ஏற்றப்பட்ட தீயல்ல
எழுந்தெரியுந் தீயிது
எரிமலைப் பிழம்பென
எழுகவேநண்பாவிரைகவே!


கொ.பெ.பி.அய்யா.








No comments:

Post a Comment