Monday 17 February 2014

சிந்தனை வரிகள்.

சிந்தனையில் சில வரிகள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனிதனுக்கு வழங்கப்பட்ட கொடைகளில்.... அழியாத ஒன்று மயிர்தான். அந்த மயிரை யார் மதிக்கிறார்கள்

---------------------------------------------------------------------

எது உயிருள்ளதோ! அது வாழ்கிறது. உயிர்தான் அனைத்தையும்உருக்குலையாமல் காக்கிறது. எதில் உயிரில்லையோ அதில் வளற்சி இல்லை. கல்லுங்கூட உயிருள்ளவரைதான் கடினம் பெறுகிறது. எப்போது அதனிடம் உயிரில்லையோ அப்போதே அது பொடியத் துவங்குகிறது. உயிர்.............அதன் வடிவம் என்னஉயிர்......அதன் இருப்பென்னயாரறிவார்?அதுவே சிவம்! எல்லாம் சிவ மயம்!

------------------------------------------------------------------------------------

நீரில் கல் போட்டால்
வட்டங்கள் விரிகின்ரன்.
காரணம்.........................!
கல்லா?நீரா

-----------------------------------------------------------------------------------

நோய்க்கு மருந்து உன்னிடமே உள்ளது..மனப் பேய்க்கு மருந்து யாரிடம் உள்ளது?

-----------------------------------------------------------------------------------

நான் யார் தெரியுமாநடந்து வாழும்போது...நீ கேட்கும் ஆனவக்கேள்வி.
நீ யார் தெரியுமாகிடந்து போகும்போது...இது ஊர் கேட்கும் கேள்வி.

-------------------------------------------------------------------------------

பசிக்குச் சோறு. சோறுக்கு உழைப்பு. சோறோடு காய் கனிகள் கலந்து உண்டு இரவில் உறக்கம். உறவில்நேருக்கம் காலை மாலை கட்டாயம் காயம் கழுவிட நோயும் நெருங்குமோ உன்னை!..

-----------------------------------------------------------------------------------------------

பசி மறந்தும் பட்டும் காய்ந்தும் வெட்டப்படும் காடுகள் வாழ ஒற்றைக்காலில் தவமோ! ஒற்றை மரம்!..

--------------------------------------------------------------------------------------------

வீட்டைக் கட்டினோம் வாசலை மறந்தோம்! காட்டை வெட்டினோம் காரினைத் துறந்தோம்!

----------------------------------------------------------------------------------------------

ஏரினைத் தொலைத்து பாரினைத் தேடுகிறோம்! ஊரினைத் தொலைத்து உறவினைத் தேடுகிறோம்! வேரினைத் தொலைத்து விழுதினைத்தேடினால் காரியும் உமிழ கார்மேகம் வெறுக்கும்

-------------------------------------------------------------------------------------

பனை மரம் அடி நின்று பதநீரே குடித்தாலும் பார்ப்பவர் கண்ணுக்கு பழுதாகவே தோன்றும்.

---------------------------------------------------------------------

வானம் ஏன் குவிந்துள்ளது.நாணத்திலும் சிவந்துள்ளது! தோணும் மாலைப்பொழுதது தூரமில்லை என்பதால்.

-------------------------------------------------------------------------

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். கோழையின் சிரிப்பில் குழந்தையை காணலாம். காளையின் சிரிப்பில் காதலைக் காணலாம். காலையின் சிரிப்பில் காட்சிகள் காணலாம். சேலையின் சிரிப்பில் செழுந்தமிழ் காணலாம்.

---------------------------------------------------------------------------------

நேற்றை மறந்துவிடு. இன்றை நம்பித்தொடு. நாளை கவலை விடு. உன்னை நீயே நம்பிடு.

-----------------------------------------------------------------------------------
வெற்றி தோல்விகளை பற்றி நீ தயங்காதே. துணிவைத் துணையாக்கு பணிந்திடும் எதிர்காலம்..
--------------------------------------------------------------------
தோல்விகள் அஞ்சியோடும். வெற்றிகள் கெஞ்சி வரும். அனைத்தும் நீயே. ஆவதெல்லாம் நன்மையே.

------------------------------------------------------------------------------

எங்கே போகிறது விரைகிறோம் அடிமைத்தனம் நோக்கி அரசியல்இலண்டன் போன திசை நோக்கியாவாரிசரசியல் வளர்த்து மீண்டும்

------------------------------------------------------------------------------

வருவாய் தருவாய் பெறுவாயென தெருவாசல் நின்றழைக்கும் வேசியென அரசுத் துறையினரும் இழிக்கிறார் கருமஞ் செய்திடவும் கைக்கூலி கேட்கிறார்.
மாமூல் தாதாக்களின் வட்டார மையங்கள். சுங்கப் பங்குகளாய் அங்கங்கு வேட்டைகள். எங்கும் கொள்ளைகள் இவர்களே காவலர்கள்! .
இதுதான் சாதனையோ! இதற்குத்தான் சுதந்திரமோ! எத்தனை தியாகங்கள்! எத்தனை உயிர் பலிகள! அடசண்டாள நீசர்களே!! விடுதலைப் போராட்டமே வீணாத்தான் போனதோ! வீணரிடம் அடிமையோ

வசூல் ராசாக்களின் கோட்ட அலுவலங்கள்

-----------------------------------------------------------------------------------------------




No comments:

Post a Comment