Monday 17 February 2014

நெஞ்சு பொறுக்குதில்லை.

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

போருக்கும் நீதி யுண்டே
புரியாயோ ராசபக்சே?
குழந்தை வதங் கூடாதென
கொடுங் கோலா அறியாயோ?
பிஞ்சு அவன் பாலச்சந்திரன்-நெஞ்சைக்
காட்டக் காட்டச் சுட்டாயோ!.
கொஞ்சு மொழி தீய்த்தாயோ!-
நெஞ்சு பொறுக்கு தில்லையே.

பச்சை மண்ணு பாலகன்தான்
பாவி யுன்னை என்னசெய்தான்?
அடைத்து வைத்துச் சாய்த்த நீ
ஆண்மகனா சொல்லடா?.
அஞ்சு குண்டுகளா பிஞ்சுக்கு!-வஞ்சகா
உன் வம்சமும் விளங்குமாடா?
.நா உன்னை தண்டிக்காதா?
நெஞ்சு பொறுக்கு தில்லையே.

விலகி அவன் ஓடவில்லை
விதை யாகத் தயாரானான்.
தமிழைத் தாஙகு மிடத்தலேயே
குண்டையுந் தாங்கினான்.
புலிக்குப் பிறந்தவனடா அவன்.-இன்னும்
போராடத்தான் விளைகிறான்
புதைந்து போகாதவன் வீரம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே!
.
மாதரை அழித்துக் கொன்றான்.
மழலை யரை வேரறுத்தான்.
தள்ளாடிய முதி யோரையும்
தடியாலே அடித்து மாய்த்தான்.
நெறி பிறழ்ந்த சண்டாளனுக்கு-சிவப்புக்
கம்பளமும் விரிக்கலாமா !
வர வேற்புஞ் செய்யலாமா!
நெஞ்சு பொறுக்கு தில்லையே.

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment