Tuesday 18 February 2014

கடற் தாயே!

வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.




























வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.














வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.




























வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.

















































No comments:

Post a Comment