Tuesday 18 February 2014

சாரல் தூரல்கள்.

சாரல் தூறல்கள்

இந்த  மழை  நீர்தான்
கடலுக்குள் ஓடிவிட்டது............
அடுத்த மழை  பெய்வதற்குள்
அணை கட்டி விடலாம்..............
.===========================
என்னுடைய  சில
தவறான பழக்கக்க வழக்கங்கள்
என்   மகனையும் கெடுத்திடுமோ!!
எனக்கு  பயமாக இருக்கிறது.
==============================
தண்ணீர் கேட்டான் விவசாயி.
தர மறுத்து  விட்டார்கள்..
கண்ணீராவது அவனிடம்
மிச்சம்  மீதியிருக்கிறதா?
==============================
அதிகாரம் இருக்கும்   போதுதான்
அயர்ந்து  தூங்கிவிட்டார்கள்.......
இப்போது  பாவம் ஒப்புக்குச் சப்பாக
ஏதோ  உளறிக் கொண்டிருக்கிறார்கள்..
====================================
பாவவிமோச்சனம் தேடிச்  சிலர்
பரிகாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்..
காலங் கடந்த  ஞானம்........................
கைகொடுக்குமா??
=========================================
உடன்  பிறந்தவனைப் பகைத்துக்கொண்டால்
உற்றத் துணை  உண்டோ சொல்!
கடனுக்குப்பெறும் உதவி
காலத்ததிற்குதவுமோ!
========================================
வேடதாரி விடுங்கண்ணீர்
விடமென்றறியாதார்
பாடம்  நன்று கற்றிடுவர்
பார்க்கலாம் பொறுத்திருப்போம்..
========================================
காலத்திற்குதவாத  உறவினால்
என்ன   பயன்?
பாலமே  இல்லாத பாதையினால்
என்ன பலன்?
========================================
கழனியுமிருக்கிறது கடனுமிருக்கிறது.
உழவொழிந்து   போனபின்
கடன்மட்டுமே வதைக்கும்.....................
கழனி யாரிடமிருக்கும்?
==========================================
தருக்கள் இப்போது
தற்கொலைக்குத்தான்
உதவுகின்றன.................
அவற்றையும்  வெட்டிடலாமா?
============================
கண்கெட்டுப்போனபின்
சூரிய நமஸ்காரம்..
பெண் கெட்டுப்போனபின்
ஆரியப்  பரிகாரம்!
=================================
கரை  உடைந்து
காய்ந்திட்ட  ஏரியில்
மிஞ்சியிருப்பது
செத்துப் போன
மீன்களும்  செதில்களுந்தானே...........
====================================
தண்ணீர்  விட்டு  வளர்த்த
தென்னையோ   இளநீர் தந்து
தாகம்  தீர்க்கிறது..
கண்ணீர் விட்டு  வளர்த்த
கண்மணியோ  கடல் கடந்து
வாழ்கிறான்.......................
அள்ளிக் கொண்டு போக
கீற்றோலை .......................
கொள்ளி வைக்கத்தான்
யாரோ...............................!!!!!!!
===============================
ஊழல் செய்கிறவன் பாவி,,
ஊழல் மறுப்பவர் அப்பாவி.
.கையூட்டுப் பெற்றாலே
காரியமாகுமென
கையிலூட்டும்
காரியவாதிகள்தானே
ஊழலின் ஊற்றுக்கண்கள்.
==============================
நாடகம் ஒன்று நடக்கிறது
பாடம் ஏதோ சொல்கிறது..
பார்க்கப் பார்க்கப் புரிந்திடும்
பழைய கதையென அலுத்திடும்..
===================================
விற்பவன் பேச்சுக் கலையாலே
செத்த  எலியும்  விலையாகும்.
பிழைக்கத் தெரிந்தவன் வாழ்கின்றான்.
உழைக்க மறந்தவன் தாழ்கின்றான்..
=========================================
தென்னையைப் பெற்றால் தண்ணீரு.
பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு.
தண்ணீரில்  வளர்ந்தது தாகத்திற்கு
கண்ணீரில் வளர்த்தது கடனுக்கு.
தண்ணீர்  தந்தது இளநீரும்,  ஓலையும்.
கண்ணீர்  தந்தது கடனுங்கண்ணீரோ!
========================================
பொதுவாழ்வில் ஒளிந்துள்ளது
சுயவாழ்வு........................................
சுயவாழ்வே மனிதனின் சுயரூபம்.
சுயவாழ்வை மறைக்கத்தான்
பொதுவாழ்வு அரிதாரம்.
==========================================
முயற்சிகளின்  விளைவுகளே
பயிற்சிகளாகின்றன..
பயிற்சிகளின்  படிப்பினைகளே
பலன்களாகின்றன..
பலன்களின்  பரிசுகளே
திருவினையாகின்றன.
திருவினையழகே
தருமத்தின் காட்சி.
=========================================
இரவே இனிமை -அதில்தான்
தனிமைக்கு உரிமை.
அமைதியின் சுகவாசம்
இரவில்தான் பிரவேசம்.
ஆன்மாவின் உறவு
இரவில்தான் வரவு.
உழைத்தவன் வாசம்
இரவில்தான் நேசம்.
களைத்தவன் ராஜ்ஜியம்
இரவில்தான் பூஜ்யம்.
நினைவுகள் மறக்கும்
இரவுகள் இனிக்கும்.
உறவுகள் சங்கமிக்கும்
இரவுகள் வாழ்க!
=======================================================
தொலைந்த நாகரீகம்
கலைந்த பண்பாடு
சிதைந்த பழைமை
புதைந்த வழமை
மறைந்த அருமை
நிறைந்த சிறுமை
இதுதான் நிலைமை
இன்றைய புதுமை.

கொ.பெ.பி.அய்யா
=======================================

=======================.==============

No comments:

Post a Comment