Tuesday 18 February 2014

வறுமை சாகாதா?

வறுமை சாகவில்லை!

 வறுமை இன்னும் சாகவில்லை
  வயி றெரிஞ்சு சொல்கிறேன்.
சிறுமை செய்யும் பேதங்களும்  
  சிற கொடிந்து போகவில்லை.
வறு மையும் சிறுமையும்
  வளர்ச் சியைத்  தடுக்குது.
வளரும் ஒரு நாடாகவே
  வாழ் கிறோம்  காலமெல்லாம்.

ஒட்ட ஒரு  இடமில்லாமல்
  ஓரம் தேடி உறங்குகிறார்.
கட்டில் தேடும் இளசுகளோ
  காடுகளிலில் மறையுகிறார்.
தொட்டில் ஆடுங் குழந்தைகளோ
 தொட்டி களில் கதறுது.
மொட்டில் வாடும் பிஞ்சுகளோ
 தட்டில் பிச்சை   கேட்குது.

வயிற் றிற்கு சோறில்லாமல்
வழிப் பறிகள் செய்கிறார்.
பத்து மாதம் சுமந்துபெற்ற
பால கரை விற்கிறார்.
வேலை யேதும்  கிடைக்காமல்
வீதி களில் நிற்கிறார்.
வறுமை செய்யும் கொடுமையாலே

வழி தவறிச் செல்கிறார்.

No comments:

Post a Comment