Tuesday 18 February 2014

ஈழத்தின் ஆவிகள்.

ஈழத்தின் ஆவிகள் பேசுகின்றன.
நாடகக்காரர்களை நம்பும் நிலை இதுதான்.பாவம்! இன்றுணர்ந்த
ஆவிகள் நாங்கள் அன்றே அவர்களைப் பற்றி விசாரித்திருந்தால்.இத்தனை இழப்பு ஒருவேளை நிகழாமல் நிலைமையும் சரியாகி இருக்கலாம்.
காப்பேன் காப்பேன் எனக்கூறி ஒரேஅடியாகக்கவிழ்த்துவிட்டார்கள்
எல்லாம் முடிந்து இப்போது இழவு வீட்டில் நீலிக்கண்ணீர் வடித்து 
நடிக்கிறார்கள்.தலைவன் செத்தவீட்டில் அடுத்த தலைவன் நானே 
என்று இழவு வீட்டாரையே அவர்கள் வாயால் அறிவிக்கசெய்யும் 
தந்திரக்கரர்கள் இவர்கள்.புயல் ஓய்ந்த பின் பிணங்களில் ஒட்டிக் 
கொண்டிருக்கும் காதணிகளைக் கழட்டிக்கொண்டிருக்கிரார்கள் 
பாவிகள்.இவர்கள் எப்போதும்போல் இப்போதும் சும்மா இருந்தாலே மிஞ்சி இருப்பவர்களாவது ஆவிகளாகாமல் மிஞ்சுவார்கள்.


தெரிந்துதானே ஏமாறுகிறோம் ! 
குடும்பங்கள் கோலோச்சும் அரசியலில் 
கொள்கைகள் என்ன இருக்கும்.? 
விரித்து அறியத் தெரியாத நம்மை அவர்கள் 
சரியாகத்தான் புரிந்து வைத்துள்ளார்கள். 
மீண்டும் நாம் அடிமைப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் 
எபதை அறிந்துக் கொண்டார்கள்.எவர் இலவசம் அதிகம் அறிவிக்கிறாரோ அவருக்கே நமது ஒட்டு.கொள்கைகள் பற்றி 
அவர்கள் சொல்வதுமில்லை.நாம் விசாரிப்பதும் இல்லை. 
வாரிசு அரசியல்களால் விளையப்போகும் அபாயங்களைப் பற்றி 
நம்மைச்சிந்திக்கவிடாமலேயே அவர்கள் தந்திரமாகக் காயை 
லாவமாக நகர்த்துகிறார்கள்.பாவம் நாம் !kppayya

உணர்ச்ச்யில் பொங்கிய உறுமல்கள்!
தமிழனைத் தேடுவோம் --ஆனால்
தரமானவனைத் தேடுவோம்!
கிடைப்பானா?
தேடினால் கிடைப்பான்.
கட்சிகளை மறந்து தேடவேண்டும்.
முடியுமா?
முடியும் --ஆனால் அவன்
முழக்கம் நம் செவிகளுக்கு
எட்டுவதே இல்லை.

No comments:

Post a Comment