Tuesday 18 February 2014

விடுதலை.

விடுதலை

தீயவர்க்கும் பேயவர்க்கும் விடுதலை!
திருடருக்கும் தீவிரர்க்கும் விடுதலை!
கொலையருக்கும் விலையருக்கும் விடுதலை!
பிழையருக்கும் அலையருக்கும் விடுதலை!
காமுகர்க்கும் பாவியர்க்க்கும் விடுதலை!
ஊழலுக்கும் ஊதாரிக்கும் விடுதலை!
ஏச்சுக்கும் பேச்சுக்கும் விடுதலை!
பொய்யுக்கும் புரட்டுக்கும் விடுதலை!
ஏமாற்றுக்கும் ஏமாளிக்கும் விடுதலை!
நோட்டுக்கும் ஓட்டுக்கும் விடுதலை!
கேலிக்கும் கிண்டலுக்கும் விடுதலை!
காலிக்கும் கள்ளனுக்கும் விடுதலை!
வேலிக்கும் போலிக்கும் விடுதலை!
வெள்ளையர்க்கும் கொள்ளையர்க்கும் விடுதலை!
தொல்லைக்கும் துயருக்கும் விடுதலை!
கொடுமைக்கும் சிறுமைக்கும் விடுதலை!
விடுதலை!விடுதலை!அனைவருக்கம் விடுதலை


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment