Tuesday 18 February 2014

வெள்ளை வெளுத்திடும்.

வெளுத்திடுமா வெள்ளை?

பொழுதும் வெளுத்து அலுத்துவிட்டேன்--நானும்
புறப்படத்தான் போகின்றேன்.
அழுதும் முடித்து ஓய்ந்துவிட்டேன்--பின்னும்
ஆயிரமாய் தொடர்வாரே!

அழுக்கும் தொலைந்து ஒழியவில்லை--ஏனோ
வெளுத்தும் வெள்ளை ஆகவில்லை.
இழுக்கும் கலைந்து அழியவில்லை--நானோ
வெளுத்தும் பயனுமில்லை.

தினமும் வெளுத்திருந்தால் நலமே--தூய்மை
துணியில் தொடர்ந்திருக்கும்.
என்றோ வெளுத்தயிது முழுமை--வெளுமை
இன்றே ஒளிர்ந்தும் மிளிராது.

வள்ளுவன் காலம் தொட்டுப் புலவர்--எல்லாம்
அள்ளி வெளுத்துவிட்டார்.
இன்னும் தீரவில்லை வெளுத்தும்--அதனால்
ஒன்னும் மாறவில்லை,

ஆசை அழுக்கினை அகற்றிடப் புத்தன்--அவனும்
அலசித் துவைத்தாலும்
வேசை போலவே விடாது பற்றி--மனிதம்
வெளுத்த பாடில்லையே!

புத்தன் வெளுத்தும் அழியா மலங்கள்--இவை
எத்துணைதான் வெளுத்திடும்
சித்தம் மாசில் புத்தம் பேசுங்கொடிய--அவனின்
பித்தம் யார் வெளுப்பார்?

உயிர்கள் வதையா மனிதம்  தானே--மதங்ள்
உரைக்கும் மறைமொழிகள்.
உள்ளம் வெளுக்க எழுந்ததுதானே--வதங்கள்
உலகில் செய்திடுமோ!

ஊழல் கறையோ ஒழிந்த பாடில்லை--ஆடை
கிழியும் வரையும் அழியாது.
சாதி மதப் புகையிலைக்கறையை--கரை
வேதி மருந்தும் வெளுக்காது

தர்மம்  வெளுக்க உழைத்தது--எல்லாம்
வர்மச் சேறாய் ஆனது.
கர்மம் கண்ணாய் வெளுத்தாலும்--தீய
கறையொழிந்தும் தீராது.

தீரா அழுக்கை பூராம் வெளுக்குமோ--தீர
ஊராச் சேர்ந்து வெளுத்து
தாரா வெள்ளை ஆராக் காத்து--மனது
நேராய் வாழப் பழக்லாம்.

கொ.பெ.பி.அய்யா..







No comments:

Post a Comment