Tuesday 18 February 2014

நெஞசப் புண்.

நெஞ்சம் புண்ணாகிறது

என்ன அது சத்தம்தான்?
எட்டித்தான் பார்க்கிறேன்.
சன்னலைத் தாண்டித்தான்
சந்திவரை கேட்பதேன்?.

கற்றவர் கூடுவதும்
கருத்து வாதம் செய்வதும்
உற்றதுதான் எனும்போதும்
ஊரறியத் தடிக்கவேண்டாம்.  

மழைகொடுக்கும் மேகங்கள்
மறைபடைக்கும் கவிஞர்கள்.
கூடினால் மோத்ல்வரும்
மோதினால் இடிமுழங்கும்.

மின்னலும் முழக்கங்களும்
சன்னலைத் தாண்டவேண்டாம்.
தாளங்கொட்டி ஞானங்களாம்
தேன்கவிகள் பொழியட்டும்.

வாதங்கள் செய்திடுங்கள்.
பேதங்ககள் தவிர்ததிடுங்கள்..
உரிமைகள் பாதிக்காமல்
உரிமையுரை ஆற்றிடுங்கள்..

எழுதவும் பழகவும் நாம்
எழுத்திலொன்று கூடினோம்.
உழுது திருத்தும் நாமேதாம்
பழுதானால் என்செய்யும்!

போதுஞ்சாமி போதும்!
பொறுமைகாத்து நில்லும்!
ஆகும்வேலை ஆயிரம்..
அவரவர்க்கு இருக்கும்!

வீண்சண்டை வீண்வாதம்
வேலையற்றோர்வேலையாம்.
குழாயடிக் கும்பலோ நாம்!!
அழுவது நான் உம் பாவம்!

மதிகேட்கும் நீதிக்கு
விதிகாண வந்தெமக்கு
அஞ்சுஞ்செயல் கண்டிங்கு
நெஞ்சம் புண்ணாகிறது!



கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment