Tuesday 18 February 2014

பொங்கி இழந்த தீ.

பொறுமை இழந்து பொங்கி எழுந்த தீ!

மாணவர்களின் போராட்டத் தீ !
யாராலும் பற்றிப் பரவியதல்ல.
தானாகே பற்றிக்கொண்ட
உணர்வுத் தீ அது !
.
உணர்ச்சியின் உரசல்கள் பீச்சிய
தீப்பொறி களால் பற்றிய தீ அது.
பற்றவைக்கப்பட்டதல்ல
பற்றிக்கொண்ட தீ அது  !.

காட்டுத் தீயுங்கட்டுப்படும்.
காற்றுத் தீ யாருக்குக் கட்டுப்படும்!
இரத்தங் கொதித்த வெப்பக்காற்றால்
விளைந்த தீ அது !..

யாராலும்  அணைக்க இயலாத  தீ  !
எவராலும் அடக்கவும் முடியாத தீ !
பொறுமையிழந்து  பொங்கியெழுந்த தீ !
வறுமைக்கும் வாடாத வளருந் தீ !

பரவட்டும்  தீ !
வெப்பம் வெந்து  கொலைகாரன்
ஒப்புக்கொள்ளும்வரை
பரவட்டும் தீ !

ஒப்புக்குச்சப்பான அமெரிகாத்தீர்மானம்

திருத்தப்ப்படும்வரை பரவட்டும் தீ !

No comments:

Post a Comment