Tuesday 18 February 2014

யார் இவன்?

அதிசயம் ஆனால் உண்மை!

யார் இவன்?
இவன் பெற்றோர் யார்?
இவன் பேரென்ன ஊரென்ன?
இவன் சாதியென்ன மதமென்ன?
இவன் குலமென்ன கோத்ரமென்ன?
இத்தனை கேள்விகளுக்கும் விடையென்ன?
இவனுக்கு இந்த நிமிடம் வரை விலாசமில்லை.

இவன் புகைவண்டியில் கண்டெடுக்கப்பட்டவன்.
ஆனாலும்----------------------------------------------------------------
இவன் மீது எந்தப்புகையும் ஒட்டவில்லை.
இவன் வர்ணங்கள் பூசப்படாத புதியவன்.
இவனொரு மழைத்துளி!
இவன் நிறமற்றவன்!

இவன் யாரிடம் ஒப்படைக்கப்படுவான்?
இவனுக்கு யாருடைய வர்ணங்கள் பூசப்படும்?
இவனை அப்போதே------------------------------------
பேர்,ஊர்,சாதி,மதம்,குலம்,கோத்ரம் ஆகிய
அனைத்துப் புகைகளும் ஒட்டிக்கொள்ளும்.
அப்போதே இவனது இயற்கை நிறம் மாறும்.
அதுவரை இவனொரு அதிசயம்தான்!
ஆனாலும் உண்மைதான்.

விட்டுப் போனவள் கெட்டுப் போனவளா!
இல்லை பட்டுப்போனவளா!
விட்டுப்போனவள் இவனை மட்டுமா
விட்டுப்போனாள்!
இவனைப்பற்றிய வரணம் துடைத்து
விட்டுப்போனாள்!
இவனைவொட்டிய புகையை கழுவி
விட்டுப்போனாள்!
விட்டுப்போனவள் எப்படிப்போனாலென்னன!
அவளொரு அதிசயம் விட்டுப்போனாள்!
அதுதானே உண்மை!



கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment