Tuesday 18 February 2014

பாவம் இவன்!

பாவம் இவன்........

சுமை தாங்கி யிவனோ
சுமந்து சுமந்தே இத்திட்டான்.
எங்கு கெங்கு சுற்றினாலும்
இறுதியில் முடிவதோ
இவன் தலையில் தான்..

என்ன விலை ஏறினாலும்
இவன் தானே கொடுக்கனும்.
விலை வாசி விகிதப்படியா
வீடு தேடி வருகிறது?
வறுமை தானே  வாடிக்கை..

கடன்  தள்ளு படியென
காகிதத்தில் எழுதினார்கள்.
தள்ளுபடியை அவர்களே
தள்ளிக் கொண்டார்கள்.
தாங்கவே இவன் இருக்கிறானே..

பசி போக்கும் சாமிக்கோ
பச்சைத் தண்ணீ ரில்லை.
பூசாரி களுக்கோ பொங்கல்
போஜனப் பந்தியாம் ................
பாவம் இவன் உழவனே.
.





No comments:

Post a Comment